தென்றலுக்கும் குளிரூட்டும் உந்தன் மூச்சு,
குயில் ராகம் கெஞ்சும் உன் பேச்சு;
கயல் தோற்கும் உன் விழியில்,
நிலவும் வெட்கப்படும் உன் வழியில்;
காந்தம் உன் பார்வையிலே,
பந்தம் ஒன்று நீ வளர்த்தாய்;
பூவை நீ சூடவோ,
பூக்கள் உனை சூடுமோ;
பூக்கள் உனை சூடுமோ;
புல் தரையில் நீ நடந்தால்,
புலிகளும் பசுவாகும்;
புலிகளும் பசுவாகும்;
உன் விரல்கள் வருடுகையில்,
மழலை விரல் மென்மை மறந்திடுதே;
மழலை விரல் மென்மை மறந்திடுதே;
உன் நிழல் வீழ்கையில் மண்ணில்,
வீழ்கிறதே என் மனது.

No comments:
Post a Comment