Tuesday, October 22, 2013

ஈருயிர் ஓருடல்


உன் மடியில் நான் இருந்தேன்,
கவலைகள் என்னை அண்டவில்லை;

உன் மூச்சில் நான் வாழ்ந்தேன்,
வேதனைகள் என்னை தாக்கவில்லை;

உன் விரல் பிடித்து நான் நடந்தேன்,
பயணங்கள் என்னை மிரட்டவில்லை;

உன் அணைப்பில் துயிலுற்றேன்,
கனவுகள் என்றும் கலையவில்லை;

தவறுகள் பல நான் செய்தும்,
தண்டனைகள் பெற்றதில்லை;

பசி என்ற வார்த்தையையே,
உன் நிழலில் உணர்ந்ததில்லை;

அதிசயங்கள் பல கோடி எனும்,
"ஈருயிர்  ஓருடல்" கொண்ட அதிசயம் என்றும் உன் தாய்மைக்கே... அம்மா!

No comments:

Post a Comment