தொன் மொழிகளுள் முதன் மொழி,
எம் தாய் மொழி;
வேற்று மொழியின் துணையில்லாமல் துலங்கும்,
இது தமிழ் மொழி;
இலக்கணங்கள் அதன் அரண்களாகும்,
பல் இலக்கியங்கள் அதன் தோரணங்கள்;
இவள் சக மொழிகள் இடம் தெரியவில்லை,
வானளாவும் இவள் புகழ்ச்சி இன்னும்;
பெண் வன் கொடுமை எதிர்க்க,
குரல் தந்தாள் எம் பாரதிக்கு;
சாதி வன்கொடுமை ஒழிக்க,
கட்டுரைத்தாள் நம் பெரியார்கு;
கட்டுரைத்தாள் நம் பெரியார்கு;
இரண்டடியாகிய உலக போதுமறைக்கு,
உரு கொடுத்தாள் வள்ளுவரின்பால்;
சுதந்திர கோஷம் முழக்க,
துணை நின்றாய் வீரத்தாயாக;
என்றும் அழியாப் புகழ் மீட்டுவாய்,
திராவிடனின் உயிர் மூச்சாகா.
திராவிடனின் உயிர் மூச்சாகா.

No comments:
Post a Comment